பாராளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீன் வீட்டில் பணியாற்றிய நிலையில் தீப்பற்றி உயிரிழந்த சிறுமி நீண்ட காலமாக பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக வைத்திய பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
டயகம பகுதியை சேர்ந்த குறித்த சிறுமி 8 மாதங்களுக்கு முன்னர் ரிஷாத் பதியுதீன் வீட்டில் பணிப்பெண்ணாக வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளார்.
இந்நிலையில் குறித்த 16 வயது சிறுமி அதற்கு முன்பே பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பரிசோதனைகள் மூலம் தெரியவந்துள்ளதென பொரளை பொலிசார் தெரிவித்தனர்.
அதனால் பாராளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீனிடம் இது குறித்து வாக்குமூலம் பெறப்பட்ட உள்ளதோடு குறித்த சிறுமி வசித்த பிரதேசங்களிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட உள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
ரிசாத் பதியுதீன் வீட்டில் பணியாற்றிய சிறுமி தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.