சமீப காலங்களில் மக்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள படங்களில் கமல் நடிக்குக் ‘விக்ரம்’ படமும் ஒன்றாகும். கமலுடன் இப்படத்தில் விஜய் சேதுபதி இணைந்து நடிக்கிறார். படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ள நிலையில், கமல் உட்பட படக்குழுவினர் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிக்கும் விக்ரம் படத்தின் ஷூட்டிங் தொடங்கியது. படத்தின் முதல் நாள் ஷூட்டிங்கில் கமல், விஜய் சேதுபதி சேர்ந்து நடிக்கும் காட்டிகள் படமாக்கப்பட்டன. இந்நிலையில் தனது முதல் நாள் ஷூட்டிங் அனுபவத்தைப் பற்றி கமல் (Kamal Haasan) தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
“ஆண்டுகளில் நான் படப்பிடிப்பில் இருந்து நீண்ட நாடகள் விலகி இருந்தது இதுவே முதல் முறை. பல இயக்குனர்கள் ஆக்ஷன் என்று சொல்லியே வருடங்கள் ஆகிறது. ராஜ் கமல் பிலிம் பேக்டரியில் பணிபுரியும் எனது சகோதரர்கள், அதிலும் குறிப்பாக இயக்குனர் லோகேஷ் மற்றும் அவரது சுறுசுறுபான குழு நண்பர்கள், திறமையான விஜய் சேதுபதி (Vijay Sethupathi) மற்றும் பஹத் பாசில் என அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்” என்று குறிப்பிட்டு இருந்தார்.
இதற்கு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அளித்த பதிலில், உங்களுக்கு ‘ஆக்ஷன்’ சொல்வது எனது வாழ்நாள் கனவு. இந்த தருணத்தை நான் என்றும் மறக்க மாட்டேன் என்று கூறியுள்ளார்.
மாஸ்டர் (Master) படத்தின் வெற்றியை அடுத்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகப் போகும் படம் என்பதால் இப்படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. இந்த படம் நடிகர் கமலின் 232 வது படம் ஆகும். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். தற்போது இப்படத்தில் 2,3 வில்லன் கதாபாத்திரங்களுக்கு இன்னும் பேச்சு வார்த்ததை நடந்து கொண்டிருப்பாதாக செய்திகள் வெளிவந்தது.