பலத்த சூறாவளி காற்றினால் பாதிக்கப்பட்ட Barrie நகர மக்களுக்கு உதவிகள் வழங்கப்படும் என ஒன்றாரியோ மாகாண முதல்வர் டக் போர்ட் தெரிவித்துள்ளார்.
முதல்வர் டக் போர்ட் இன்றைய தினம் சூறாவளியினால் பாதிக்கப்பட்ட நகரிற்கு விஜயம் செய்து நிலைமைகளை நேரில் பார்வையிட்டார்.
இந்த கண்காணிப்பு விஜயத்தில் நகர மேயர் ஜெப் லெஹ்மன், சொலிசுட்டர் ஜெனரல் சில்வியா ஜோன்ஸ் ஆகியோர் இணைந்து கொண்டிருந்தனர்.
இந்தப் பகுதியில் பேரழிவு ஏற்பட்டுள்ளதாகவும் தெய்வாதீனமாக எவரும் உயிரிழக்கவில்லை எனவும் போர்ட் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
மரங்கள் வேருடன் பிடிங்கி எறியப்பட்டதாகவும் வாகனங்கள் தூக்கி வீசப்பட்டதாகவும் கட்டடங்களின் கூரைகள் கழன்று வீசப்பட்டதாகவும் சூறாவளி தாக்கத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களையும் உதவிகளையும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார்.