மிஸ்ஸிசாகுவாவில் ஏற்பட்ட தீ விபத்துச் சம்பவத்தில் ஏழு பேர் காயமடைந்துள்ளனர்.
வீடு ஒன்றில் இந்த தீ விபத்துச் சம்பவம் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த வீட்டில் இருந்த எட்டு வயது வந்தவர்களையும், நான்கு சிறார்களையும் தீயனைப்புப் படையினர் வீட்டை விட்டு வெளியேற்றியுள்ளனர்.
முன் பாதுகாப்பு அடிப்படையில் வீட்டிலிருந்த ஏழு பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.