ஐரோப்பாவில் ஏற்பட்ட சீரற்ற வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 190ஆக அதிகரித்துள்ளது. உயிரிழப்புக்கள் தொடர்பில் அதிர்ச்சியடைந்துள்ளதாக ஜேர்மன் சான்ஸ்சலர் எங்லா மேர்க்கல் தெரிவித்துள்ளார்.
சீரற்ற வானிலையால் ஜேர்மனின் தெற்கு பகுதிக்கே அதிகளவான பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன. ஜேர்மன் சான்ஸ்லர் எங்லா மேர்க்கல் பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.
கடந்த வாரத்தில் ஐரோப்பிய நாடுகளில் பெய்த அடைமழை காரணமாக வெள்ளம் மற்றும மண்சரிவு அனர்த்தங்கள் பதிவாகியுள்ளன. அதில் 188 பேர் பலியாகியுள்ளனர். பலர் காணாமல்போயுள்ளனர். ஜெர்மன், ஒஸ்ட்ரியா, பெல்ஜியம் போன்ற நாடுகளில் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.