எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க முன்வைத்த திருத்தம் நிராகரிக்கப்பட்டுள்ளது.
இன்று பாராளுமன்ற அமர்வுகள் ஆரம்பிக்கப்பட்ட போது சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன ரணில் விக்ரமசிங்கவின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாக அறிவித்தார்.
உதய கம்மன்பில அமைச்சருக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையை ஒட்டுமொத்த அரசாங்கத்திற்கும் அமைச்சரவைக்கும் எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை என திருத்தம் செய்யுமாறு ரணில் விக்ரமசிங்க எழுத்து மூலம் கோரிக்கை முன்வைத்தார்.
எனினும் இந்த நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பான விவாதம் நேற்று ஆரம்பிக்கப்பட்ட நிலையில் இன்று மாலை வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.