அமெரிக்க மற்றும் வெளிநாட்டுப் பிரஜைகள் கனடாவிற்குள் பிரவேசிக்க அனுமதி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு மருந்தளவு கொவிட் தடுப்பூசி ஏற்றப்பட்ட அமெரிக்க பிரஜைகள் கனடாவிற்குள் பிரவேசிக்க அனுமதிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 9ம் திகதி அமெரிக்கர்கள் கனடாவிற்குள் பிரவேசிக்க அனுமதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், எதிர்வரும் செப்டம்பர் மாதம் 7ம் திகதி வெளிநாட்டுப் பிரஜைகள் நாட்டுக்குள் பிரவேசிக்க அனுமதிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொவிட் நோய்த் தொற்று காணமாக கனேடிய எல்லைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
வெளிநாட்டுப் பிரஜைகள் நாட்டுக்குள் பிரவேசிக்கவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான ஓர் பின்னணியில் தற்பொழுது நாட்டில் கொவிட் கட்டுப்பாடுகள் கிரமமான அடிப்படையில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.