அமெரிக்கா எவ்வாறு கொவிட் தளர்வுகளை ஏற்படுத்த வேண்டும் என கனடா தீர்மானிக்காது என பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடே தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா தனது எல்லைகளை எவ்வாறு நிர்ணயிக்கும் என்பதனை கனடாவினால் கூற முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 9ம்திகதி தடுப்பூசி ஏற்றப்பட்ட அமெரிக்கர்களுக்கு எல்லைகளை திறப்பதாக கனடா அறிவித்துள்ளது.
ஒவ்வொரு நாடுகளும் எப்போது எல்லைகளை திறக்க வேண்டும் என்பதனை அந்தந்த நாடுகளே தீர்மானிக்க வேண்டுமென பிரதமர் ட்ரூடே தெரிவித்துள்ளார்.
கொவிட் பரவுகையை கட்டுப்படுத்தும் நோக்கில் நீண்ட காலமாக கனடா எல்லைகள் மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.