Home கனடா டெல்டாவிலிருந்து பாதுகாக்க 90 வீதமானோருக்கு தடுப்பூசி ஏற்றப்பட வேண்டும்

டெல்டாவிலிருந்து பாதுகாக்க 90 வீதமானோருக்கு தடுப்பூசி ஏற்றப்பட வேண்டும்

by Jey

டெல்டா திரிபிலிருந்து பாதுகாத்துக் கொள்ள 90 வீதமானோருக்கு தடுப்பூசி ஏற்றப்பட வேண்டுமென ஒன்றாரியோ மாகாண பிரதம மருத்துவ அதிகாரி டொக்டர் Kieran Mooreதெரிவித்துள்ளார்.

12 வயதுக்கு மேற்பட்ட 75 வீதமானோருக்கு இரண்டு மாத்திரை கொவிட் தடுப்பூசிகளையும் ஏற்றப்பட்டதன் பின்னரே முழு அளவில் சுகாதார கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என மாகாண அரசாங்கம் அறிவித்திருந்தது.

எனினும், இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்பட வேண்டுமெனவும் டெல்டா திரிபு தாக்கத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ள 90 வீதமானோருக்கு தடுப்பூசி ஏற்றப்பட வேண்டுமென டொக்டர் Kieran Moore தெரிவித்துள்ளார்.

ஒன்றாரியோ மாகாணத்தில் 18 மில்லியன் தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளதுடன் இன்னமும் 2.4 மில்லியன் பேருக்கு தடுப்பூசி ஏற்றப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

related posts