பிரிட்டிஷ் கொலம்பியாவில் அவசர நிலைமை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
மாகாணம் முழுவதிலும் கடுமையான காட்டுத் தீ பரவுகை ஏற்றபட்டுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பிரிட்டிஷ் கொலம்பியாவின் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் Mike Farnworth அவசரகால நிலை குறித்து அறிவித்துள்ளார்.
மாகாணத்தில் வெப்பத்துடனான காலநிலை நீடிக்கும் என எதிர்வு கூறப்பட்டுள்ள நிலையில் மேலும் காட்டுத் தீ பரவல்களை எதிர்பார்க்க முடியும் என குறிப்பிட்டுள்ளார்.
இதுவரையில் சுமார் 1100 ஹெக்ரயர் வரையில் காட்டுத் தீ பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காட்டுத் தீ பரவுகையின் போது உடனடியாக மக்களை வீடுகளிலிருந்து பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றுதல் உள்ளிட்ட அத்தியவாசியமான தீர்மானங்களை சுயாதீனமான மேற்கொள்ள வேண்டும் என்ற காரணத்தினால் அவசர நிலைமை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.