ஹெய்ட்டி நாட்டின் புதிய பிரதமராக ஏரியல் ஹென்ரி (Ariel Henry) பதவியேற்றுள்ளார்.
அண்மையில் சுட்டுக் கொல்லப்பட்ட ஜனாதிபதி ஜோவனெல் மொய்ஸ், பிரதமராக பதவியேற்குமாறு ஏரியல் ஹென்ரியிடம் ஏற்கனவே கேட்டுக் கொண்டதாக அந்நாட்டு ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
எனினும், அந்நாட்களில் இடைக்கால பிரதமராகவிருந்த Claude Joseph உடன் காணப்பட்ட அரசியல் மோதலில் ஹென்ரி அப்பதவியை நிராகரித்திருந்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் (19) Claude Joseph தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
இதனையடுத்து, ஹெய்ட்டின் புதிய பிரதமராக Ariel Henry இன்று (21) பதவியேற்றுள்ளார்.
ஹெய்ட்டி நாட்டின் ஜனாதிபதி Jovenel Moise, கடந்த 07ஆம் திகதி அடையாளம் தெரியாத குழுவினரால் சுட்டுக் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.