சீனாவின் ஹெனான் பிராந்தியத்தில் கனத்த மழை காரணமாக பலத்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வெள்ள அனர்த்தத்தினால் இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஹெனான் பிராந்தியத்தின் பல பெருந்தெருக்கள் நீரிழ் முழ்கியுள்ளமையை வெளிநாட்டு ஊடகங்கள் காட்சிப்படுத்தியுள்ளன. கடந்த சில தினங்களாக சீனாவில் பலத்த மழையுடன் வெள்ள அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. 10 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக மீட்பு குழுவினர் தெரிவிக்கின்றனர்.
சீரற்ற காலநிலை காரணமாக ஹெனான் பிராந்தியத்தில் விமான போக்குவரத்துக்களும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. இப்பிராந்தியத்தில் 94 மில்லியன் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். மண்சரிவு மற்றும் வெள்ள அனர்த்தம் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.