Home உலகம் கொரோனா காரணமாக ஆஸியில் பகுதியளவில் முடக்க நிலை

கொரோனா காரணமாக ஆஸியில் பகுதியளவில் முடக்க நிலை

by Jey

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த கடும் சட்டங்கள் அமுல்ப்படுத்தப்பட்டதை அடுத்து அவுஸ்திரேலியாவில் அரைவாசிக்கும் அதிகமான மக்கள் வீட்டிற்குள் முடங்க வேண்டி ஏற்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவில் 13 மில்லியனுக்கு அதிகமான மக்கள் இவ்வாறு வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ளனர்.

விக்டோரியா, தெற்கு அவுஸ்திரேலியா மற்றும் நியூ சவுத் வேல்ஸ் ஆகிய மாநிலங்கள் மூடப்பட்டதையடுத்தே இந்நிலை உருவாகியுள்ளது. தொற்றாளர்கள் ஐவர் அடையாளம் காணப்பட்டதையடுத்து, தெற்கு அவுஸ்திரேலிய மாநிலம் நேற்று முதல் 7 நாட்களுக்கு மூடப்பட்டுள்ளது.

டெல்டா தொற்றுக்குள்ளானவர்கள் அடையாளம் காணப்படுவதையடுத்து சிட்னி நகரம் தற்போது 5 வாரகாலமாக மூடப்பட்டுள்ளது. இன்றைய தினம் சிட்னி நகரில் புதிதாக 110 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதற்கமைய சிட்னி நகரில் மாத்திரம் அடையாளம் காணப்பட்டுள்ள டெல்டா தொற்றாளர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 300ஐ கடந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

 

related posts