அதி ஆபத்து வலயங்களை திறப்பதற்கு கொவிட் தடுப்பூசி சான்றிதழ்கள் அவசியமானது என தெரிவிக்கப்படுகின்றது.
ஒன்றாரியோ மாகாணத்தின் விஞ்ஞான ஆலோசனைக் குழுவினால் இந்தப் பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பிலான 21 பக்க அறிக்கையொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
பொதுவான ஓர் கட்டமைப்பின் கீழ் கொவிட் தடுப்பூசி ஏற்றப்பட வேண்டுமெனவும், இதற்கான ஓர் சான்றிதழ் வழங்கப்பட வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒன்றாரியோ மாகாணத்தில் இந்த தடுப்பூசி சான்றிதழ்கள் தற்காலிக அடிப்படையில் பயன்படுத்தப்பட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதி ஆபத்து வலயங்களை திறப்பதற்கு இந்த சான்றிதழ் உதவியாக அமையும் என மருத்துவ நிபுணர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.