அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான உயர்நிலைப் பேச்சுவார்த்தை ஒன்று இந்த வார இறுதியில் இடம்பெறவுள்ளது.
இதில் கலந்துகொள்ள, அமெரிக்க வெளியுறவுத் துணை அமைச்சர் வெண்டி ஷெர்மன் சீனா செல்லவுள்ளார்.
ஆனால் அதற்கு முன்பாகவே, தனது உள்நாட்டு விவகாரங்களில் தலையிட வேண்டாம் என சீனா அவருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
அவரைக் கீழறுக்க சீனா முயல்வதாகக் கருதி, அவரது பயணத்தை அமெரிக்கா முன்னதாக ரத்து செய்யவிருந்தது. சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீயை, திருவாட்டி ஷெர்மன் சந்திப்பதற்கு அமெரிக்கா கோரிக்கை விடுத்திருந்தது.
இருப்பினும், வாங் யீக்குப் பதிலாக, வெளியுறவுத் துணை அமைச்சர் சியே பெங்கை அந்தச் சந்திப்பில் கலந்துகொள்ள சீனா நியமித்தது.
சீனா தனது அரசுரிமையையும், பாதுகாப்பு நலன்களையும் கட்டிக்காக்கும் உறுதியான நிலைப்பாடு பற்றி, ஷெர்மனுக்குத் தெளிவாக எடுத்துரைக்கவிருப்பதாய்க் கூறியுள்ளது.