ஆப்கானிஸ்தான் பிரஜைகளுக்கு புகலிடம் வழங்கும் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கனேடிய தூதரகத்துடனும், அமைதி காக்கும் படையினருடனும் தொடர்பு பேணிய ஆப்கான் பிரஜைகளுக்கு இவ்வாறு புகலிடம் வழங்கப்பட உள்ளது.
குறிப்பாக ஆப்கான் அமைதி காக்கும் பணிகளில் ஈடுபட்டிருந்த படையினருக்கு மொழிபெயர்ப்பு உதவிகளை வழங்கியவர்கள் கனடாவில் குடியேற்றப்பட உள்ளனர்.
தலிபான்களிடமிருந்து கடுமையான அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளதாக ஆப்கானிஸ்தான் பிரஜைகள் தெரிவிக்கின்றனர்.
அமைதி காக்கும் படையினருக்கு உதவிய ஆப்கான் பிரஜைகள் இவ்வாறு கனடாவில் துரித கதியில் குடியேற்றப்பட உள்ளனர்.