Home விளையாட்டு நீண்ட இடைவெளிக்கு பின்னர் இந்தியாவை வீழ்த்தி இலங்கை வெற்றி

நீண்ட இடைவெளிக்கு பின்னர் இந்தியாவை வீழ்த்தி இலங்கை வெற்றி

by Jey

இந்திய அணியுடனான மூன்றாவது ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில், இலங்கை அணி 3 விக்கெட்களினால் வெற்றி பெற்றுள்ளது

கொழும்பு ஆர் பிரேமதாஸ விளையட்டரங்கில் நேற்று நடைபெற்ற இந்தப் போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

மழையுடனான வானிலை காரணமாக, போட்டி 47 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது.

இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 43.1 ஓவர்கள் நிறைவில், சகல விக்கெட்களையும் இழந்து 225 ஓட்டங்களை பெற்றது.

இந்திய அணி சார்பில் Prithvi Shaw 49 ஓட்டங்களையும்,Sanju Samson 46 ஓட்டங்களையும், Suryakumar Yadav 40 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக் கொண்டனர்.

பதிலுக்கு 226 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 39 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்களை இழந்து 227 ஓட்டங்களை பெற்று வெற்றியை தனதாக்கிக் கொண்டது.

இலங்கை அணி சார்பில் Avishka Fernando 76 ஓட்டங்களையும் Bhanuka Rajapaksa 65 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக் கொண்டனர் .

இதன்படி, மிக நீண்ட இடைவெளிக்கு பின்னர், இலங்கை அணி போட்டியொன்றில் வெற்றியீட்டியது.

எனினும், ஏற்கனவே இரண்டு போட்டிகளில் வெற்றியீட்டிய இந்திய அணி, இலங்கையுடனான ஒரு நாள் தொடரை கைப்பற்றியது.

இதேவேளை இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையில் மூன்று இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டிகளும் நடைபெற உள்ள நிலையில், முதலாவது போட்டி நாளைய தினம் (25) இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது

related posts