இந்தியாவின் மகாராஷ்ட்ரா மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவினால் 112 பேர் உயிரிழந்துள்ளனர். சீரற்ற வானிலை காரணமாக நூற்றுக்கும் அதிகமானோர் காணாமல்போயுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
தொடர்ச்சியாக பெய்த மழை காரணமாக வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்களால் வீதி போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. பயிர் நிலங்களும் வெள்ளத்தால் அழிவடைந்துள்ளன. ஜுன் மாதத்திலிருந்து, செப்டெம்பர் மாதம் வரை நிலவும் பருவப்பெயர்ச்சி காரணமாக வருடாந்தம் இந்தியாவில் உயிர்சேதங்களும், சொத்து சேதங்களும் பதிவாகின்றன.
இந்திய கடற்படை மற்றும் தேசிய அனர்த்த முகாமைத்துவ படையணி இணைந்து அனர்த்தங்களினால் காணாமல்போனவர்களை கண்டறியும் பணியை ஆரம்பித்துள்ளன. அத்துடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகளும் வழங்கப்படுவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.