ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதலில் நடத்தப்பட்டதில் 33 தலிபான்கள் பலியாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
ஆப்கானிஸ்தானில் இரு பகுதிகளில் இராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் 30 தலிபான்கள் உயிரிழந்ததாகவும், 17 பேர் படுகாயம் அடைந்ததாகவும் அந்நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சர் உறுதிசெய்துள்ளார்.
வடக்கு ஜாவ்சான் பகுதியைச் சேர்ந்த முர்காப் மற்றும் ஹாசன் தப்பின் கிராமத்தில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகளை சுற்றிவளைத்த இராணுவம் வான்வெளித் தாக்குலைத் தொடர்ந்தது. இதில் 19 பயங்கரவாதிகள் பலியானார்கள்.
மேலும் 15 பேர் படுகாயம் அடைந்தனர். இதில் தலிபான்கள் பயன்படுத்திய ஆறு இருசக்கர வாகனங்கள், இரண்டு பதுங்கு குழிகள், பயங்கர ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களையும் ராணுவத்தினர் கண்டுபிடித்து அழித்தனர்.
இதேபோல், ஹெல்மண்ட் மாகாணத்தில் ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் 14 பயங்கரவாதிகள் பலியானார்கள், 2 பேர் காயம் அடைந்தனர் என்றும் அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன