கோவிட் தடுப்பூசி எங்கே என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் கேள்வி எழுப்பியுள்ளார்.
கோவிட் தடுப்பூசி நாடு முழுவதும் செலுத்தப்பட்டு வருகிறது. தற்போது வரை 43,31,50,864 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. தடுப்பூசி குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் மத்திய அரசை விமர்சித்து வருகிறார். இதற்கு மத்திய அரசு பதிலடி கொடுத்து வருகிறது.
இந்நிலையில், ராகுல், தனது டுவிட்டர் பக்கத்தில் ‛தடுப்பூசி எங்கே’ என்ற ஹேஷ்டேக் மூலம் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: இந்தத் தேசத்தின் மனதை, மக்களின் மனதை புரிந்து கொண்டவராக இருந்திருந்தால், தடுப்பூசி செலுத்தும்நிலை இப்படி இருந்திருக்காது என தெரிவித்துள்ளார். மேலும், தடுப்பூசி குறித்த பல்வேறு தகவல்கள் அடங்கிய வீடியோ ஒன்றையும் ராகுல் வெளியிட்டு உள்ளார்.