இலங்கையின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரும் வெற்றிகரமான வர்த்தகருமான ஆர். ராஜமகேந்திரன் காலமானார்.
சிரச, சக்தி ஊடக வலையமைப்பு உள்ளிட்ட பாரிய நிறுவனமான கெப்பிட்டல் மகாராஜா குழுமத்தின் தலைவராக ராஜமகேந்திரன் கடமையாற்றினார்.
கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று (25) அதிகாலை அன்னார் காலமானார்.
கொவிட் தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்ததாகவே அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சுகாதார வழிமுறைகளை பின்பற்றி இன்று பிற்பகல் ராஜ மகேந்திரனின் உடல் தகனம் செய்யப்பட்டது.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களான சரத் பொன்சேகா உள்ளிட்ட பல்வேறு முக்கியஸ்தர்கள் இந்த இறுதிக் கிரியைகளில் பங்கேற்றிருந்தனர்.
அன்னாரின் மறைவிற்கு இந்திய உயர்ஸ்தானிகராலயம் உள்ளிட்ட பல்வேறு தரப்புக்களும் இரங்கல் வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.