றொரன்டோவில் கடுமையான மழை பெய்யக்கூடிய சாத்தியம் உண்டு என கனேடிய சுற்றாடல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்றைய தினம் இரவு கன மழை பெய்யக் கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
றொரன்டோவின் சில பகுதிகளில் 30 முதல் 50 மில்லி மீற்றர் வரையிலான மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.