கனடாவின் 30ம் ஆளுனர் நாயகமாக மேரி சிமோன் இன்றைய தினம் அதிகாரபூர்வமாக பதவி ஏற்றுக் கொண்ட உள்ளார்.
ஒட்டாவா செனட் கட்டிடத்தில் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது.
இன்னுக் என்னும் பழங்குடியினத்தைச் சேர்ந்த மேரி சிமோன் கனடாவின் முதல் பழங்குடியின ஆளுனர் நாயகம் என்பது குறிப்பிடத்தக்கது.
மேரி சிமோனின் பதவி ஏற்பு நிகழ்வுகள் ஆங்கிலம், இன்னுக் மொழிகளிலும் எட்டு பழங்குடியின மொழிகளிலும் நேரலையாக ஒலிபரப்புச் செய்யப்பட உள்ளது.
பதவிப் பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் மேரி சிமோன் தேசிய வீர்ர்கள் நினைத்தூபிக்கு சென்று உயிர் நீத்த படைவீர்ர்களுக்கு அஞ்சலி செலுத்துவார் என தெரிவிக்கப்படுகின்றது.