Home இலங்கை டயகம சிறுமியின் சடலத்தை தோண்டி எடுக்க தீர்மானம்

டயகம சிறுமியின் சடலத்தை தோண்டி எடுக்க தீர்மானம்

by Jey

பாராளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியூதின் வீட்டில் பணிப்பெண்ணாக வேலை செய்த நிலையில் உயிரிழந்த டயகம சிறுமியின் சடலத்தை தோண்டி எடுத்து மீண்டும் பிரேத பரிசோதனை மேற்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் குறித்து விசாரணை நடத்தி வரும் விசேட பொலிஸ் குழு சடலத்தை மீண்டும் தோண்டி எடுக்கவென நீதிமன்றில் அனுமதி கோரவுள்ளதாக அறிவித்துள்ளது.

இது குறித்த மேலதிக விசாரணைகள் நடத்தும் நோக்கில் பிரதான பொலிஸ் பரிசோதகர் வருணி போகாவத்த தலைமையிலான விசாரணை குழு டயகம நோக்கிச் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

related posts