அமெரிக்காவின் ஜனாதிபதி ஜோ பிடனும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினும் கடந்த மாதம் ஜெனீவாவில் சந்தித்தபோது இடம்பெற்ற மூலோபாய ஸ்திரத்தன்மைக்கான பேச்சுவார்த்தையின் அடுத்த கட்டம் ஜெனீவாவில் அடுத்த வாரம் மீண்டும் இடம்பெறவுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை இந்த சந்திப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்ட அமெரிக்க வெளியுறவுத்துறை, இந்த பேச்சுவார்த்தை, எதிர்கால ஆயுதக் கட்டுப்பாடு மற்றும் இடர் குறைப்பு நடவடிக்கைகளுக்கு அடித்தளத்தை அமைக்கும் என்று தெரிவித்துள்ளது.
ஜூலை 28 நடைபெறவுள்ள இந்த சந்திப்பு, அமெரிக்க தூதுக்குழு துணை வெளியுறவுத்துறை செயலாளர் வெண்டி ஷெர்மன் தலைமையில் நடைபெறும், அண்மையில் ஆயுதக் கட்டுப்பாடு மற்றும் சர்வதேச பாதுகாப்புக்கான மாநில செயலாளராக நியமிக்கப்பட்ட Bonnie Jenkins என்பவரும் இந்த சந்திப்பில் கலந்துகொள்வார்.
இரு நாடுகளுக்கிடையே பல விடயங்களில் காணப்படும் முரண்பாடுகளுக்கு மத்தியில் இருதரப்பு உரையாடல் ஏற்பாடாகியுள்ளது.