ஆப்கானிஸ்தான் அரசாங்கம் நாடு முழுவதுக்கும் ஊரடங்கு உத்தரவை அமுல்படுத்தியுள்ளது.
தலிபான்கள் நகரங்களுக்குள் நுழைவதை தடுக்கும் முயற்சியாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தலைநகர் காபூல் மற்றும் இரண்டு மாகாணங்களைத் தவிர ஏனைய மாகாணங்களில் மக்கள் நடமாட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
சர்வதேச துருப்புக்கள் நாட்டிலிருந்து விலகுவதால் கடந்த இரண்டு மாதங்களாக தலிபான் மற்றும் ஆப்கானிய அரசாங்கப் படைகளுக்கு இடையிலான மோதல் அதிகரித்துள்ளது.
அமெரிக்கா துருப்புக்களை திரும்பப் பெற்றதும், எல்லைக் கடப்புகளையும், கிராமப்புறங்களில் உள்ள பிற பிரதேசங்களையும் தலிபான் கைப்பற்றியுள்ளது.
இந்நிலையில் வன்முறையைத் தடுப்பதற்கும், தலிபான்கள் தொடர்ந்து முன்னேறி வருவதாலும் 31 மாகாணங்களில் இரவு நேர ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளது.