Home கனடா சளி காய்ச்சல் வைரஸ் தொற்றுக்கள் ஏற்படக்கூடிய அபாயம்

சளி காய்ச்சல் வைரஸ் தொற்றுக்கள் ஏற்படக்கூடிய அபாயம்

by Jey

சளி காய்ச்சல் வைரஸ் தொற்றுக்கள் ஏற்படக் கூடிய அபாயம் நிலவி வருவதாக சிறுவர் நல நிபுணத்துவ மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கோடை காலத்தில் சுவாசப்பை தொடர்பான வைரஸ் தொற்றுக்கள் ஏற்படக் கூடிய அபாயம் காணப்படுவதாக தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக சிறார்களை இந்த வைரஸ் தொற்றுக்கள் பாதிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 2020ம் ஆண்டில் கொவிட் தவிர்ந்த வேறு சளிக் காய்ச்சல் வைரஸ் தொற்று நிலைமைகள் மிகவும் குறைவான அளவில் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எனினும் இந்த ஆண்டில் வருடாந்தம் பதிவாகும் சளிக் காய்ச்சல் வைரஸ் தொற்றுக்களை அவதானிக்க முடியும் என மருத்துவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

related posts