Home விளையாட்டு ஒலிம்பிக் போட்டிகளுக்கு காலநிலையினால் தாக்கம்

ஒலிம்பிக் போட்டிகளுக்கு காலநிலையினால் தாக்கம்

by Jey

கொரோனா தொற்று பரவல் காரணமாக ஒரு வருடத்திற்கு ஒத்திவைக்கப்பட்ட டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் கடந்த வாரம் ஆரம்பமாகியது. போட்டிகளில் கலந்துகொண்டுள்ள ஒரு சில வீரர்கள் தொற்றாளர்களாகவும் இனங்காணப்பட்;டுள்ளனர். பல்வேறு தடைகளுக்கு மத்தியிலும் ஆரம்பமாகிய ஒலிம்பிக் போட்டிகள் சீரற்ற காலநிலையினால் தடைப்பட்டது.

கிழக்கு ஜப்பானை பாதித்துள்ள சூறாவளி காரணமாக கடும் மழையும் பலத்த காற்றும் வீசுவதாக அறிவிக்கப்படுகிறது. சூறாவளியானது டோக்கியோ நகரையும் பாதித்துள்ளது. இதனால் இன்று நடைபெறவிருந்த போட்டிகளை தாமதப்படுத்h அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். கடந்த 24 மணி நேரத்தில் தலைநகர் டோக்கியோவில் 32 மில்லிமீற்றர் மழைவிழ்ச்சி கிடைத்துள்ளது. மணிக்கு 118 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசுவதாக அந்நாட்டு வளிமண்டலவியல் முகவர் நிலையம் தெரிவிக்கிறது.

related posts