Home கனடா அல்பர்ட்டாவில் கொவிட் பரவுகை தீவிரம்

அல்பர்ட்டாவில் கொவிட் பரவுகை தீவிரம்

by Jey

அல்பர்ட்டா மாகாணத்தில் கொவிட் பரவுகை தீவிரமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கொவிட் பெருந்தொற்றின் மூன்றாம் அலையின் உச்சகட்ட நிலைகளை விடவும் தற்பொழுது அதிகளவில் நோய்த் தொற்று பரவி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அல்பர்ட்டா மாகாண சுகாதார மற்றும் தொற்று நோயியல் நிபுணர்கள் இந்த விடயத்தை தெரிவித்துள்ளனர்.

ஓரு நோய்த் தொற்றாளியிடமிருந்து மற்றும் பலருக்கு பரவுகை வேகமானது மிகவும் உயர்வடைந்துள்ளது என தெரிவித்துள்ளனர்.

நோய்த் தொற்று உறுதியாளர் எண்ணிக்கை குறைவாக காணப்பட்டாலும் பரவுகை வேகமானது மிகவும் அதிகம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மூன்றாம் அலையின் போது பரவுகை வேகம் 1.15 ஆக காணப்பட்டதாகவும் தற்பொழுது 1.48 ஆக அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தடுப்பூசிகளை ஏற்றிக் கொள்ளுமாறு அனைவருக்கும் அறிவுறுத்தல் வழங்கி வருவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

related posts