கொவிட் தடுப்பூசி சான்றிதழ் தொடர்பில் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடே தனது நிலைப்பாட்டை இதுவரையில் வெளியிடவில்லை.
எவ்வாறெனினும் தடுப்பூசி ஏற்றப்பட்டமைக்கான ஆதாரம் ஒன்று விரைவில் அறிமுகம் செய்யப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எளிமையானதும் வினைத்திறனானதுமான ஓர் முறைமை அறிமுகம் செய்பய்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் தடுப்பூசி சான்றிதழ் தொடர்பில் அவர் நேரடியாக எதனையும் கூறவில்லை.
தடுப்பூசி சான்றிதழ் தொடர்பில் மாகாணங்கள் தங்களது திட்டங்களை அமுல்படுத்த முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஓர் சான்றிதழ் உருவாக்குவதில் மத்திய அரசாங்கத்தின் பங்களிப்பு இருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் மாகாண அரசாங்கங்கள் இந்த சான்றிதழ் விவகாரத்தில் முன்மொழிவுகளை முன்வைத்து பொதுவான ஓர் கட்டமைப்பினை உருவாக்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.