பிரிட்டிஷ் கொலம்பியாவில் வெப்ப அலை காரணமாக 580 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
பிரிட்டிஷ் கொலம்பிய மாகாண திடீர் மரண பரிசோதகர்களினால் இந்த விபரம் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த புள்ளி விபரத் தரவுகளில் மாற்றம் ஏற்படக் கூடும் எனவும் இது ஆரம்ப தகவல்கள் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
கடுமையான வெப்பநிலை காரணமாக இவ்வாறு மரணங்கள் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
திடீர் மரணங்களின் எண்ணிக்கை சடுதியாக உயர்வடைந்துள்ளதாகவும் ஒவ்வொரு மரணத்திற்கான காரணங்களையும் துல்லியமாக கண்டறிந்ததன் பின்னரே சரியான தகவல்களை வெளியிட முடியும் எனவும் திடீர் மரண பரிசோதகர்கள் தெரிவிக்கின்றனர்.