கொரோனா வைரஸ் பரவலை தடுக்க கடந்த ஜூன் மாதம் முதல் அவுஸ்திரேலியாவின் சிட்னி நகர் முடக்கப்பட்டது. அக்காலத்தை மேலும் ஒரு மாதத்தினால் நீடிக்க அதிகாரிகள் இன்று நடவடிக்கை எடுத்தனர்.
அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மற்றும் தென் அவுஸ்திரேலியா மாநிலமும் இன்று முதல் முடக்கப்பட்டுள்ளன. சிட்னி நகரம் ஒரு மாத காலமாக முடக்கப்பட்டிருந்த போதிலும் நாளாந்தம் பதிவாகின்ற டெல்டா தொற்றாளர்கனளின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வதாக சுகாதார பிரிவு தெரிவிக்கின்றது.
சிட்னி நகரில் அமைந்துள்ள நியூ சவுத்வேல்ஸ் மாநிலத்திலிருந்து இன்று 177 டெல்டா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர்.
இதுவரை சிட்னி நகரில் மாத்திரம் 2500 இற்கும் அதிகமான தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இதனால் விதிக்கப்பட்டுள்ள சட்ட விதிகளை தீவிரப்படுத்தவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சிட்னி நகர வாசிகளுக்கு தமது வீடுகளிலிருந்து 10 கிலோ மீட்டர் வரை மாத்திரமே பயணிக்க முடியும். கடந்தகாலங்களில் அவுஸ்திரேலியாவில் நாளாந்த தொற்றாளர்கள் சிறியளவில் இனங்காணப்பட்டுள்ளதுடன் கொரோனா வைரஸ் பரவலை சிறந்த முறையில் கட்டுப்படுத்திய நாடாகவும் அவுஸ்திரேலியா காணப்பட்டது.