அல்பர்ட்டா மாகாணத்தில் கொவிட் சுகாதார கெடுபிடிகள் மேலும் தளர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தனிமைப்படுத்தல் மற்றும் முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பிலான கெடுபிடிகள் தளர்த்தப்படும் என பிரதம பொதுச் சுகாதார அதிகாரி டொக்டர் Deena Hinshaw தெரிவித்துள்ளார்.
கொவிட் தொற்று உறுதியானவர்களின் நெருங்கிய தொடர்பாளர்கள் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட மாட்டார்கள் எனவும், நோய்த் தொற்றின் அறிகுறி தென்பட்டால் அவர்கள் தனிமைப்படுத்தப்படுவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
பொதுப் போக்குவரத்தின் போது முகக்கவசம் கட்டாயப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
எவ்வாறெனினும் மாகாணத்தில் அண்மைய நாட்களாக கொவிட் தொற்றாளர் எண்ணிக்கை பாரியளவில் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.