இந்தியப் பிரதமர் ட்விட்டரில் (Twitter) மிகவும் சுறுசுறுப்பாக செயல்பட்டு வருகிறார். மேலும் நாட்டின் வளர்ச்சியைப் பற்றிய தனது கருத்துக்களை ஒளிபரப்பவும், புதிய சாதனைகளை முன்னிலைப்படுத்தவும், தனது அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் நலத்திட்டங்களை பரப்பவும் மைக்ரோ பிளாக்கிங் சமூக ஊடக தளத்தை அவர் தவறாமல் பயன்படுத்துகிறார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேற்று மற்றொரு மைல்கல்லை அடைந்தார். அவரது ட்விட்டர் கணக்கில் அவரை பின்தொடரும் ஃபாலோயர்களின் எண்ணிக்கை நேற்று 70 மில்லியனைத் தாண்டியது. இதன் மூலம், சமூக ஊடகத் தளமான ட்விட்டரில் தற்போது பதவியில் உள்ள அரசியல்வாதிகளில் அதிகம் பின்பற்றப்படும் அரசியல்வாதி ஆகியுள்ளார் பிரதமர் மோடி.
குஜராத் முதல்வராக இருந்த காலத்தில் 2009 ல் பிரதமர் மோடி ட்விட்டரைப் பயன்படுத்தத் தொடங்கினார். 2010 இல், அவருக்கு ஒரு லட்சம் ஃபாலோயர்கள் இருந்தனர்.
பிரதமர் மோடிக்குப் (PM Modi) பிறகு, அதிக ஃபாலோயர்களைக் கொண்டுள்ள ட்விட்டர் கணக்குகளில் போப் பிரான்சிஸின் ட்விட்டர் பக்கம் 53 மில்லியனுக்கும் அதிகமானஃபாலோயர்களைக் கொண்டுள்ளது.
ஜூலை 2020 இல், பிரதமரின் ட்விட்டர் ஃபாலோயர்கள் 60 மில்லியனைத் தாண்டினர்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு 30.9 மில்லியன் ஃபாலோயர்கள் உள்ளனர்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு (Joe Biden) ட்விட்டரில் 30.9 மில்லியன் ஃபாலோயர்களும், முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுக்கு ட்விட்டரில் 129.8 மில்லியன்ஃபாலோயர்களும், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோனுக்கு 7.1 மில்லியன் ட்விட்டர் ஃபாலோயர்களும் உள்ளனர்
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு ட்விட்டரில் 26.3 மில்லியன் ஃபாலோயர்கள் உள்ளனர். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு 19.4 மில்லியன் ஃபாலோயர்கள் உள்ளனர்.
முன்னதாக, டொனால்ட் டிரம்ப் ட்விட்டரில் மிக அதிக ஃபாலோயர்களைக் கொண்ட அரசியல்வாதியாக இருந்தார். ஆனால் அமெரிக்க கேபிட்டலில் நடந்த கலவரங்கள் காரணமாக அவரது கணக்கு நிரந்தரமாக நிறுத்தப்பட்டது. ட்விட்டர் அவரது கணக்கை நிறுத்துவதற்கு முன்னர் முன்னாள் அமெரிக்க அதிபருக்கு 88.7 மில்லியன் ஃபாலோயர்கள் இருந்தனர்.