பிரிட்டிஷ் கொலம்பியாவின் சில பகுதிகளில் மீண்டும் முகக் கவசங்கள் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
மாகாணத்தின் சில பகுதிகளில் கொவிட் தொற்று உறுதியாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துச் செல்லும் காரணத்தினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
நோய்த் தொற்று பரவுகையை கட்டுப்படுத்தும் நோக்கில் புதிய கட்டுப்பாடுகள் பல விதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பிரிட்டிஷ் கொலம்பியாவின் kanagan, Thompson-Cariboo-Shuswap மற்றும் Kootenays ஆகிய பகுதிகளில் கொவிட் தொற்று பரவுகை தீவிரமடைந்துள்ளது.
மக்கள் ஒன்று கூடும் பொது உள் இடங்களில் முகக் கவசம் அணிதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
உரிய சமூக இடைவெளியை பேண முடியாத இடங்களில் வெளியிடங்களிலும் மக்கள் முகக் கவசங்களை அணிந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.