Home கனடா அதி மாத்திரை அளவு மருந்து பயன்பாடு குறித்து எச்சரிக்கை

அதி மாத்திரை அளவு மருந்து பயன்பாடு குறித்து எச்சரிக்கை

by Jey

அதி மாத்திரை அளவு மருந்து பயன்பாடு குறித்து றொரன்டோ பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

றொரன்டோவின் மிட்டவுன் மருந்து வகைகள் அதி மாத்திரை அளவில் எடுத்துக் கொள்வதனால் ஏற்பட்டதாக சந்தேகிக்கப்படம் மரணங்கள் அதிகளவில் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த இரண்டு வாரங்களாக இவ்வாறான சந்தேகத்திற்கு இடமான மரணங்கள் பதிவாகி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

நேற்றைய தினமும் 39 வயதான ஆண் மற்றும் அதே வயதான பெண் ஒருவரும் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர்.

இந்த மரணங்களும் மருந்து அதி மாத்திரை அளவில் பயன்படுத்தியதனால் ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

related posts