கிழக்கு ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற திடீர் வெள்ளப்பெருக்கினால் 60 பேருக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். கடந்த சில நாட்களாக நிலவும் மழை காரணமாக வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது.
சேற்று நீர் மற்றும் இடிபாடுகளுக்குள் சிக்கிய நிலையில் பலர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
அவர்களில் சிறுவர்கள் மற்றும் பெண்களும் உள்ளடங்குகின்றனர். வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்கள் தலிபான் ஆயுததாரிகளின் கட்டுப்பாட்டில் உள்ளதுடன் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 150 ஐக் கடந்துள்ளதாக தலிபான் அமைப்பு தெரிவிக்கிறது.
இந்நிலையில் அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டவர்களை மீட்பவர்களுக்கு குறித்த பிரதேசங்களுக்கு செல்வது தொடர்பில் தலிபான் அமைப்பிற்கும் ஆப்கானிஸ்தான் அரசாங்கத்திற்கும் இடையில் பேச்சுவார்த்தைகளும் ஆரம்பமாகியுள்ளன.