Home கனடா ஆப்கான் மொழிபெயர்ப்பாளர்கள் கனடா குடியேறுவதில் தொழில்நுட்ப சிக்கல்

ஆப்கான் மொழிபெயர்ப்பாளர்கள் கனடா குடியேறுவதில் தொழில்நுட்ப சிக்கல்

by Jey

ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த மொழி பெயர்ப்பாளர்கள் கனடாவிற்குள் குடியேறுவதில் தொழில்நுட்ப சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் தாக்குதல்கள் அதிகரித்துள்ள நிலையில், அங்கு அமைதி காக்கும் பணியில் ஈடுபட்டிருந்த கனேடியர்களுக்கு உதவிய ஆப்கான் பிரஜைகள் குறிப்பாக மொழி பெயர்ப்பாளர்கள் உயிர் ஆபத்தை எதிர்நோக்கி வருகின்றனர்.

அவ்வாறு உயிர் ஆபத்தை எதிர்நோக்கி வரும் ஆப்கான் பிரஜைகளை கனடாவில் குடியேற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது.

எனினும், குடியேறுவது குறித்த விண்ணப்பங்களை மின்னஞ்சலில் பெற்றுக்கொண்டு அவரை நிரப்பி அனுப்புவதில் கூட தொழில்நுட்ப பிரச்சினைகள் காணப்ப்படுவதாக மொழிபெயர்ப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மூன்று நாட்களில் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க்ப்பட வேண்டுமென கனடா அறிவித்திருந்த போதிலும் தற்பொழுது தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது.

related posts