Home கனடா வறட்சி நிலைமை உணவு உற்பத்தியை பாதித்துள்ளது

வறட்சி நிலைமை உணவு உற்பத்தியை பாதித்துள்ளது

by Jey

மேற்கு கனடா பகுதிகளில் நிலவி வரும் கடுமையான வறட்சி நிலைமையானது உணவு உற்பத்தியை பாதிக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த இரண்டு தசாப்த காலங்களில் நிலவிய மிக மோசமான வறட்சி நிலைமை இதுவென தெரிவிக்கப்படுகின்றது.

கடுமையான வெப்பநிலை மற்றும் வறட்சி நிலைமையினால் மேற்கு கனடாவின் உணவு உற்பத்தி மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.

கனேடிய புள்ளிவிபரவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள தகவல்களில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

போதியளவு மழை வீழ்ச்சி இன்மை மற்றும் கடுமையான வெப்பநிலை காரணமாக விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த வறட்சி நிலைமை நீடித்தால் விவசாயிகள் அறுவடை செய்வதில் பெரும் சிரமங்களை எதிர்நோக்க நேரிடும் என தெரிவிக்கப்படுகின்றது.

related posts