Home உலகம் விண்வெளிக்குச் சென்ற ரஷ்ய விண்கலத்தில் கோளாறு

விண்வெளிக்குச் சென்ற ரஷ்ய விண்கலத்தில் கோளாறு

by Jey

சர்வதேச விண்வெளி மத்திய நிலையத்தை நோக்கிச் சென்ற ரஷ்யாவின் புதிய விண்கலத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளது. எனினும் இதனால் விண்கலத்தில் பயணித்தவர்களுக்கு எவ்வித ஆபத்தும் இல்லையென ரஷ்ய விண்வெளி மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

விண்வெளி தொடர்பான ஆய்விற்கென சர்வதேச விண்வெளி மத்திய நிலையத்தை நோக்கிச் சென்ற நவுகா மொடியுல் என்ற பெயரைக் கொண்ட ரஷ்ய விண்கலத்தில் 7 பேர் இணைந்திருந்தனர். சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்துடன் குறித்த விண்கலம் இணைந்து சில மணித்தியாலங்களில் இந்த கோளாறு ஏற்பட்டுள்ளது. எஞ்சினில் கோளாறு ஏற்பட்டுள்ளதாக அதில் உள்ள விண்வெளி வீரர்கள் ரஷ்ய விண்வெளி ஆய்வு நிலையத்திற்கு அறிவித்துள்ளனர்.

எனினும் தமக்கு எவ்வித ஆபத்தும் இல்லையென விண்வெளி வீரர்கள் தெரிவிக்கின்றனர். சர்வதேச விண்வெளி மத்திய நிலையம் மற்றும் பூமிக்கு இடையிலான தொடர்புகளை பேணும் நடவடிக்கை ரஷ்யாவுக்கு சொந்தமான விண்கலத்தின் மூலம் முன்னெடுக்கப்படுகிறது. இருப்பினும் குறித்த நவுக்கா மொடியுல் விண்கலத்தின் செயற்பாடுகளை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 3 ம் திகதி வரை ஒத்தி வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

related posts