Home உலகம் கொவிட் காரணமாக சுவிஸில் ஒன்லைன் வர்த்தகம் அதிகரிப்பு

கொவிட் காரணமாக சுவிஸில் ஒன்லைன் வர்த்தகம் அதிகரிப்பு

by Jey

கொவிட் -19 தொற்றுநோயால் தூண்டப்பட்ட சுவிட்சர்லாந்தின் ஒன்லைன் வர்த்தகம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் தொடர்ந்து வளர்ச்சியடைந்து வருகின்றது.

2020 ஆம் ஆண்டில் ஏற்கனவே 30% வளர்ச்சியைப் பெற்ற ஒன்லைன் வர்த்தகம், 2021 ஆம் ஆண்டின் முதல் பாதியில் மேலும் 15% வளர்ச்சியடைந்துள்ளதாக வியாழக்கிழமை வெளியிடப்பட்ட ஒரு அறிக்கை கூறுகிறது.

தளபாடங்கள் மற்றும் அலங்காரம் (+35%), விளையாட்டு (+27%) தொடர்பான வர்த்தகங்கள் வலுவான செயல்திறனைக் காட்டின, அதே நேரத்தில் மல்டிமீடியா/கணினி மற்றும் fashion துறைகள் 13% வளர்ச்சியடைந்துள்ளன.

ஒட்டுமொத்தமாக 2021 ஆம் ஆண்டில், கடைகளில் நேரடி வர்த்தகத்துக்கான தடைகளைத் தளர்த்துவது கடந்த ஆண்டை விட குறைவான ஒன்லைன் வளர்ச்சியை காண்பிக்கும் என்று எதிர்பார்த்தாலும், ஒன்லைன் சில்லறை வர்த்தகம் மேலும் 5% முதல் 8% வரை அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.

related posts