கனேடிய வதிவிடப் பாடசாலைகள் தொடர்பில் சுயாதீனமான விசாரணைகள் நடாத்தப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சுயாதீன விசாரணையை வலியுறுத்தி ஒட்டாவாவில் மக்கள் நேற்றைய தினம் ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.
சுமார் ஐநூறுக்கும் மேற்பட்டவர்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.
நுனாவட்டின் என்.டி.பி.கட்சி நாடாளுமன்ற உறுப்பினரகளான Mumilaaq Qaqqaq, சார்ளி அங்குஸ் ஆகியோர் இந்த பேரணியை ஏற்பாடு செய்திருந்தனர்.
பழங்குடியின மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதி கிடைக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
சுயநலவாத அடிப்படையில் செயற்படுவது கைவிடப்பட்டு நியாயம் நிலைநாட்டப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிட்டும் வரையில் போராட்டங்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.