Home உலகம் பைசர் மற்றும் மொடர்னா தடுப்பூசிகளின் விலை உயர்வு

பைசர் மற்றும் மொடர்னா தடுப்பூசிகளின் விலை உயர்வு

by Jey

கொரோனா வைரஸிற்கு எதிரான பைசர் மற்றும் மொடார்னா தடுப்பூசிகளின் விலை அதிகரித்துள்ளது.

ஐரோப்பிய சங்கத்துடன் தடுப்பூசி நிறுவனம் மேற்கொண்ட புதிய ஒப்பந்தத்தின் விலை மறுசீரமைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதற்கமைய பைசர் தடுப்பூசி 19.50 அமெரிக்க டொலராகவும், மொடார்னா தடுப்பூசி 25.50 அமெரிக்க டொலராகவும் அதிகரித்துள்ளது. சர்வதேச ரீதியில் எழுந்துள்ள கேள்விக்கமைய விலை அதிகரிப்பை மேற்கொண்டுள்ளதாக குறித்த நிறுவனம் அறிவித்துள்ளது

இதேவேளை ஐரோப்பிய சங்கத்திற்குட்பட்ட நாடுகளில் நூற்றுக்கு 70 வீதமான முதியவர்களுக்கு இவ்வருட இறுதிக்குள் முழுமையாக தடுப்பூசி ஏற்றுமாறு ஐரேப்பிய சங்கம் குறிப்பிட்டுள்ளது.

இதுவரை 57 வீதமானோருக்கு தடுப்பூசியின் முதலாவது டோஸ் வழங்கப்பட்டுள்ளது. எவ்வாறெனினும் தடுப்பூசியின் விலை அதிகரிப்பு தொடர்பில் ஐரோப்பிய சங்கம் இதுவரை எந்தவொரு தகவலையும் வெளியிடவில்லை.

related posts