அல்பர்ட்டா மாகாணத்தில் கரடியொன்று தாக்கியதனால் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வடக்கு அல்பர்ட்டா பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
26 வயதான பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்தப் பெண் உலங்கு வானூர்தி நிறுவனமொன்றில் கடமையாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
குறித்த உலங்கு வானூர்தி நிறுவனம் மரம் நடுகையில் ஈடுபடுவோரை போக்குவரத்துச் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது.
இந்தப் பெண் உலங்கு வானூர்தியின் ஊடாக சிகிச்சைக்கா அழைத்துச் செல்லப்பட்ட போதிலும் உயிரிழந்தார் என தெரிவிக்கப்படுகின்றது.