கனடாவின் சுகாதார முறைமை மோசமானது என அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அதிக வருமானமுடைய பதினொரு நாடுகள் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கடைசியிலிருந்து இரண்டாம் இடத்தை வகிக்கின்றது.
Commonwealth Fund என்ற அமைப்பினால் இந்த ஆய்வு நடாத்தப்பட்டுள்ளது.
சிறந்த சுகாதார கட்டமைப்பினை உடைய நாடுகளின் வரிசையில் நோர்வே முன்னணிலை வகிக்கின்றது.
அதற்கு அடுத்தபடியாக நெதர்லாந்து மற்றும் அவுஸ்திரேலிய ஆகிய நாடுகள் அடுத்த இடங்களை வகிக்கின்றன.
எனினும், இந்த வரிசையில் மோசமான சுகாதார கட்டமைப்பினைக் கொண்ட நாடாக அமெரிக்காவும் அதற்கு அடுத்தபடியாக கனடாவும் இடம்பெற்றுள்ளன.