தமிழ் திரையுலகில் நடிகர், தயாரிப்பாளர், பாடகர், பாடலாசியர் என பல அவதாரங்களை எடுத்து அதை சிறப்பாக செய்து புகழ்பெற்றவர் சிவகார்த்திகேயன். இவர் கடந்த 2010 ஆம் ஆண்டு ஆர்த்தி என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஆராதனா என்கிற 8 வயது மகள் உள்ளார்.
கடந்த ஜூலை 12 ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்தது. இதையடுத்து ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் சிவகார்த்திகேயனுக்கு (Sivakarthikeyan) வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் தனது மகனுக்கு குகன் தாஸ் என பெயரிட்டு உள்ளார். இந்த தகவலை அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு பதிவாக தெரிவித்துள்ளார். தனது மகனை வாழ்த்திய அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் என அந்த பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் மகனின் நெற்றியில் முத்தமிட்டபடி இருக்கும் புகைப்படத்தையும் அவர் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.