மொன்றியலில் இடம்றெப்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தில் மேலும் இரண்டு பேர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
துப்பாக்கிச் சூடு குறித்து 911 என்ற அவசர அழைப்பு இலக்கத்திற்கு அதிக எண்ணிக்கையிலான அழைப்புக்கள் கிடைக்கப் பெற்றது என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் Veronique Comtois தெரிவித்துள்ளார்.
குடியிருப்பு ஒன்றின் மீது வெளியே இருந்து துப்பாக்கிச் சூடு நடாத்தப்பட்டுள்ளது.
சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக முன்னதாக தெரிவிக்கப்பட்டது பின்னர் மேலும் இரண்டு பேர் உயிரிழந்தனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் எவரும் கைது செய்யப்படவில்லை.