ஆப்கானிஸ்தானைச் செர்ந்த ஏதிலிகளில் ஒரு தொகுதியினரைக் கொண்ட முதல் விமானம் கனடாவை வந்தடைந்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் அமைதி காக்கும் பணியில் ஈடுபட்டிருந்த கனேடிய படையினருக்கு உதவிய ஆப்கானிஸ்தான் மொழி பெயர்ப்பாளர்கள் உள்ளிட்ட சிலருக்கு இவ்வாறு ஏதிலி அந்தஸ்து வழங்கப்படுகின்றது.
தலிபான் தீவிரவாதிகளினால் இந்த மொழி பெயர்ப்பாளர்கள் உள்ளிட்ட கனேடிய படையினருக்கு ஆதரவு வழங்கியவர்கள் ஆபத்துக்களை எதிர்நோக்கக் கூடும் என்ற அச்சத்தினால் இவ்வாறு ஏதிலி அந்தஸ்து வழங்கப்படுகின்றது.
முதல் விமானத்தில் எத்தனை ஏதிலிகள் கனடாவிற்கு வருகை தந்தனர் என்பது பற்றிய விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
எவ்வாறெனினும், அளித்த வாக்குறுதிக்கு அமைய ஆப்கான் ஏதிலிகளை குடியேற்றும் நடவடிக்கைகளை அரசாங்கம் துரித கதியில் மேற்கொண்டு வருவதாக குடிவரவு குடியகழ்வுத் திணைக்களப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு நாட்டுக்கு அழைத்து வரப்படுவோருக்கு கோவிட் பரிசோதனை நடாத்தப்பட்டு தனிமைப்படுத்த்தல் விதிகள் பின்பற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.