”கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை உலக நாடுகளுக்கு வழங்குவதுடன், அதை சொந்தமாக தயாரிக்க, இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு உதவி வருகிறோம்,” என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளதாவது:உலக நாடுகளுக்கு அமெரிக்கா 50 கோடி தடுப்பூசியை இலவசமாக வழங்கும். இம்மாத இறுதியில் அது துவங்கும். ஏற்கனவே 65 நாடுகளுக்கு 11 கோடி தடுப்பூசிகளை வழங்கியுள்ளோம். மேலும் எங்களிடம் கையிருப்பில் உள்ள, எட்டு கோடி தடுப்பூசிகளை இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு வழங்குவதாக அறிவித்தோம்.
தடுப்பூசிகளை அனுப்பும் பணி ஏற்கனவே துவங்கியுள்ளது.உலக நாடுகளுக்கு தடுப்பூசியை வழங்குவதுடன், அதை சொந்தமாக தயாரிக்க, இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு உதவி வருகிறோம்.
‘குவாட்’ அமைப்பில் அமெரிக்காவுடன் உள்ள இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான் நாடுகளில் இதற்கான வசதிகளை அளித்து வருகிறோம்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.