Home கனடா ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வார் என நினைத்துக்கூட பார்க்கவில்லை அன்ட்ரேயின் தாய்

ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வார் என நினைத்துக்கூட பார்க்கவில்லை அன்ட்ரேயின் தாய்

by Jey

தமது மகன்  Andre De Grasse ஒலிம்பிக் போட்டித் தொடரில் தங்கப் பதக்கம் வென்றெடுப்பார் என நினைத்துக் கூட பார்க்கவில்லை என இன் தாய் தெரிவித்துள்ளார்.

மார்க்கம் பகுதியைச் சேர்ந்த 26 வயதான அன்ட்ரே டோக்கியோ ஒலிம்பிக் போட்டித் தொடரின் 200 மீற்றர் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றிருந்தார்.

அன்ட்ரேயின் வெற்றியை மார்க்கம் மக்கள் கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வெற்றி குறித்து பெருமிதம் கொள்வதாகவும், சிறு பிராயத்தில் அன்ட்ரே பாடசாலைக்கு செல்ல விரும்பாமல் இவ்வாறு விளையாடித் திரிவதாகவே கருதியதாகத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அன்ட்ரேவின் வெற்றியை கொண்டாடும் நோக்கில் அகஸ்ட் மாதம் 4ம் திகதியை Andre De Grasse தினமாக அறிவிக்கப்படும் என மார்க்கம் மேயர் பிராங்க் ஸ்கார்பிட்டி தெரிவித்துள்ளார்.

related posts